கண்விளிம்பிற் கண்டுகொண்டேன் காதற் கீதம் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிள(ங்காய் காய் மா தேமா)
(1, 3 சீர்களில் மோனை)

வண்ணமகள் நீதானே வந்தா யின்று;
கண்விளிம்பிற் கண்டுகொண்டேன் காதற் கீதம்!
கண்விழித்துப் பார்த்தவுடன் களித்தே னின்று;
சுண்டுவிர லசைவினிலே சொன்னேன் விண்டு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-24, 9:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே