SILAIGAL

கருங் கல்லால் சிலை செய்து பார்த்தேன் - அதன்
கண்களுக்கு உயிர் தந்து பார்த்தேன்
ஐம்பொன்னால் சிலை செய்து பார்த்தேன் - அவள்
அழகை எல்லாம் அதில் வைத்து பார்த்தேன்

தங்கத்தால் சிலை செய்து பார்த்தேன் - அவள்
அங்கத்தை போல் செய்து பார்த்தேன்
சந்தனத்தில் சிலை செய்து பார்த்தே - அவள்
சரீரத்தை போல் செய்து பார்த்தேன்

பளிங்கிலே சிலை செய்து பார்த்தேன் - அவள்
பருவத்தை போல் செய்து பார்த்தேன்
பவளத்தில் சிலை செய்து பார்த்தேன் - அவள்
பவள வாய் போல் செய்து பார்த்தேன்

பாலிலே சிலை செய்து பார்த்தேன் - அந்த
பாற்குடம் போல் செய்து பார்த்தேன்
பாகிலே சிலை செய்து பார்த்தேன் - ஒரு
பாகத்தை போல் செய்து பார்த்தேன்

பூக்களில் சிலை செய்து பார்த்தேன் - அவள்
பூவுடலை போல் செய்து பார்த்தேன்
தேனிலே சிலை செய்து பார்த்தேன் - அவள்
தேனிதழை போல் செய்து பார்த்தேன்

வைரத்தில் சிலை செய்து பார்த்தேன் - மணி
வயிற்றை போல் செய்து பார்த்தேன்
வண்ணத்தில் சிலை செய்து பார்த்தேன் - அவள்
கன்னத்தை போல் செய்து பார்த்தேன்

பனிக்கட்டி சிலை செய்து பார்த்தேன் - அவள்
பார்வையை போல் செய்து பார்த்தேன்
பழச் சாற்றில் சிலை செய்து பார்த்தேன் - அவள்
பக்குவத்தை போல் செய்து பார்த்தேன்

கவிதையில் சிலை செய்து பார்த்தேன் - அவள்
கார்குழலை போல் செய்து பார்த்தேன்
காற்றில் தான் சிலை செய்ய வில்லை - அந்த
கலையை தான் இன்னும் கற்க வில்லை

எத்தனை சிலைகள் செய்தாலும் - அவை
எதிலும் எனக்கு திருப்தி இல்லை
எல்லாம் அவள் போல் இருக்கின்றதே தவிர
எதுவும் அவளாக ஆக வில்லை

அனைத்தையும் பார்த்து அவள் மகிழ்ந்தாள்
அவளை மட்டும் பார்த்து நான் மகிழ்ந்தேன்
மேன் மேலும் செய்வேன் நான் அவள் மகிழ
தான் மகிழ்ந்து அவள் தந்து நான் மகிழ



எழுதியவர் : PAVAI-ABBAS (31-Aug-10, 4:09 pm)
சேர்த்தது : abbasghani
பார்வை : 480

மேலே