கண்டுபிடித்து விடுகிறார்கள்....!!!

வாகனத்தை
வேகமாக முறுக்கி ஒட்டியபடி
தெருமுனையில் நின்று
பேசிக்கொண்டிருக்கும்
நண்பர்களின்
கூட்டத்தின் நடுவே
முன் சக்கரத்தை தூக்கி
பொத்தென்று இறக்கி
பிரேக்கை அழுத்தி பிடித்து
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்................ரென்று
டயர்கள் தேய
வாகனத்தை நிறுத்தும்
தொனியிலேயே
கண்டுபிடித்து விடுகிறார்கள்....
என்னடா,
உன் ஆளை
பார்த்துட்டு வர்றியா....!!!