விலை மாது !
கருப்பு சிவப்பு ஐரோப்பா ஆசியா
சிறியவர் பெரியவரென்று
உலகமயமாக்களின் உறைவிடமாய்
திகழ்ந்தது அவ்விடம் !!
பணக்காரன் ஆனாலும்
ஏழை ஆனாலும்
கவனிப்பு ஒன்றென்று
சமத்துவம் புகட்டினால் அவள் !
ஆயிரம் புத்தகம் படித்தவனாயினும்
அனா ஆவனா தெரியாதவனாயினும்
மனதையும் உடலையும்
மடக்கவா முடியும் !!
மதுவும் மாதுவும் கொழிக்கும்
குறுகிய தெருக்களில்
பாரம்பரியம் காக்கத்
துடித்தது ஒரு கூட்டம் !
இந்தப் பாதைகள் வாழ்க்கைப்
பாடம் படிக்கும் சாலைகள்
ஒவ்வொரு அறையிலும்
ஒவ்வொரு தத்துவம் !
போலியாய் சிரித்து
பிடித்தது போல் நடித்து
தூரிகை போடும்
அவளது கண்களில் மட்டும்
மங்கலாய் எரிந்தது மாலை
நேரத்து சிவப்பு விளக்கு !!
ஆம்ஸ்டர்டம் நகரத்து தெருக்களில் உலாவிய போது உணர்ந்தது !!