இயற்கை
பூவை தேடும் பூமனமே
அது பூக்கும் நேரம் எங்கிருந்தாய்
நிலவு வருவாள் என நினைத்து
கிழக்கை நோக்கி காத்திருந்தாய்
விழியை திறக்கும் நாழிகையில்
எங்கு ஓடி ஒளிந்துகொண்டாய்.
மலரில் சிந்தும் தேன்துளியே
யாரை காண வந்தாயோ
வளைந்து செல்லும் ஆறுகளே
உன் கடலில் சேர யாத்திரையோ