சுமை

பூமி தொட்ட
முதல் மழையை
மண் மறந்தது

கொடியில் பூத்த
முதல் மலரை
கிளைகள் உதிர்த்தது

முத்தம் இட்ட
முதல் வண்டை
மலர்கூட பிரிந்தது

பாழும் இதயம் தொட்ட
முதல் காதலை
ஏன் உயிர் இன்னும் சுமக்குது

எழுதியவர் : kanyabp (30-Jan-12, 3:02 am)
Tanglish : sumai
பார்வை : 274

மேலே