உயிர்(எழுத்து)தாய் பகுதி 1
அன்னை ஓர் ஆலயம் என்று
அவளை போற்றிப் புகழ்வது நன்று
அன்பு தருவதில் அட்சய பாத்திரம்
அதுவே அவளின் தாரக மந்திரம்
ஆதாமின் மனைவி தொடங்கிய உறவு
ஆண்டவனின் மனம் அடங்கிய உறவு
ஆளாக்கும் அன்பில் வெள்ளப் பெருக்கு
ஆயினும் அவளிடம் இல்லை செருக்கு
இனிமையில் தாய் அமிர்தத்தை வென்றாள்
இதயத்தின் மையத்தில் இனிதே நின்றாள்
இரவும் பகலும் காக்கும் கண்கள்
இனிய உறவை உருவாக்கும் பெண்கள்
ஈ எறும்பும் அண்டாமல் காப்பாள்
ஈன்ற பிள்ளையை இமயத்தில் சேர்ப்பாள்
ஈரமிக்க நெஞ்சில் கங்கையே தோற்கும்
ஈசனுக்கு நிகரென உலகமே ஏற்கும்
உரலில் உன்னைக் கட்டுவதும் அன்னை
உறங்காமல் உணவை ஊட்டுவதும் அன்னை
உள்ளே இருந்து உதைக்கும் உன்னை
உருகும் அன்பால் வதைக்கும் அன்னை..