நாட்காட்டி ஜோசியம்

நாட்காட்டியில்
தேதியை கிழிக்கும்
முன்னே கிழிந்து போகிறது
மனது - இன்று என்ன
போட்டிருப்பார்களோ என்று

நல்லது போட்டால்
சந்தோசமாய் தொடங்குவோம்
அடுத்தடுத்த வேலையை ...

அதுவே
கெட்டது போட்டால்
அர்ச்சனைகள் விழும்
குறி சொன்னவனுக்கு

இன்னும் எத்தனை
காலம் தான் அடுத்தவன்
வார்த்தையில்
வாழ்க்கையை ஓட்டுவது ? ?

எழுதியவர் : honey (2-Feb-12, 11:08 am)
சேர்த்தது : honeywing
பார்வை : 224

மேலே