சொன்னவன் மட்டும் என் கையில் கிடைத்தால் . . .
ஞாயிறு ஆரஞ்சு
திங்கள் வெள்ளை
செவ்வாய் வெள்ளி சிவப்பு
புதன் பச்சை
வியாழன் மஞ்சள்
சனி கருப்பு
எந்த புண்ணியவான்
சொன்னானோ தெரியவில்லை
கிழமை தவறாமல்
உடுத்திக் கொண்டு
கிரக ப்ரீத்தி
செய்து கொண்டிருக்கிறாள்
மனைவி
நல்லவேளை
வாரத்திற்கு ஏழு
நாட்களோடு போனதால்
சற்றே பிழைத்தது என் பணப்பை
நாளொரு கலரும்
பொழுதொரு வண்ணமுமாக
வாழ்க்கை போய் கொண்டிருக்க
திடீரென கிளம்பியது புரளி
அண்ணிக்கு தர வேண்டும்
தேங்காய் பல தட்டுடன்
அரைப்பவுன் என்று
ஆஹா என் தங்கை
தரப்போகும் அரைக்காசிற்கு
ஆயிரத்தெட்டு அற்புத கனவுகள்
அடிக்கடி உலாவந்தன
ஆனால்
மறந்து விட்டேன்
என் தர்மபத்தினிக்கு
நான்கு அண்ணன்கள் என்று
இதை சொன்னவன் மட்டும்
என் கையில் கிடைத்தால் . . .

