பிதற்று!
பிதற்று!
குட்டைக்குள் குமுறி அழுது...
குருதி குட்டைக்குள் குமுறி அழுது,
கொலை வாளில் சிகப்புக்குழம்பு,
குழி தோண்டி புதைத்தும் கூட
குரல் எழுந்து காற்றில் புதைந்து,
ஏதோதோ எழுத்து எழுதி,
ஏதோதோ பிதற்றி பிய்த்து,
பிணங்களை நுகர்ந்தது ஒரு பிணம்!
சிவனென்று சங்கறுத்து,
சிலுவையில் ரத்தம் வடிந்து,
அல்லாவென்று அழிந்துபோய
அவதிகள் என்னவென்ன?
அழுத்தமாய் கைநாட்டு
ஏந்தியது போதும் இந்நாடு!
யாரோ எங்கோ பிதற்றி யாரென்ன செய்யப்போகிறார்கள்?
இருந்தாலும் கொஞ்சம் பிதற்று!