அறம் செய மற!..

அன்பை மற
ஆணவத்துடன் நட
இறுமாப்புடன் இரு
ஈகை செய்யாதே
உதாசினப்படுத்து
ஊதாரியாய் இரு
எதிர்த்து பேசு
ஏளனமாய் நட
ஐயப்படாதே
ஒருவருக்கும் உதவாதே
ஓரவஞ்சனை செய்
ஔவையாராய் ஆகாதே..

எதை ஒன்றை செய்யச்சொன்னாலும்
அதற்கு
எதிர்மறையாய் செய்வதுதானே
மனிதகுணம்

தயவுசெய்து
இதையும் படித்துவிட்டு
இதற்க்கும்
எதிர்மறையாகவே
செய்து பாருங்களேன்........

எழுதியவர் : அன்புடன் மலிக்கா (2-Feb-12, 7:27 pm)
பார்வை : 194

மேலே