யார் இவன் ...(எனது பார்வையில் )
இவன் .....
புத்தாண்டுகளின் போதும் ....
பொங்கலின் போதும் ...
வீடுகளுக்கு வாழ்த்துசொல்லும்
சொந்தக்காரன் ......
துரத்தில் இறந்தவரின் இறப்பை
தூதாய் தந்தி கொடுக்கும்
இலவுக்காரன் .......
சிகப்பு அடிக் கோடிட்ட
என் மார்க் சீட்டுகளை
அப்படியே அப்பாவிடம் சேர்க்கும்
மனச்சாட்சி இல்லாதவன் .......
வாய்தா முதல்.....
வழக்குகள் வரை......
சண்டைகள் புனைய
அச்சாணியாய் இருப்பவன் ......
ஜாதி மத பேதமில்லா
திருமண ஓலை கொடுக்கும்
உறவுக்காரன் .......
சிலருக்கு வேலை கிடைத்ததையும் .......
சிலருக்கு வேலை போனதையும் சொல்லும் .....
முக விரசம் இல்லாதவன் .......
மொட்டை கடுதாசி கொடுத்ததற்கும் ......
காதல் கடுதாசிகொடுத்ததற்கும் .....
அடிகள் பல வாங்கும்
அபலைககாரன்.........
இவன் .......
பண்டைய புறாக்களின்
இன்றைய கண்டுபிடிப்பாய் ....
இதோ, வந்து கொண்டிருக்கிறான் .......
எங்கள் ஊர் ........
தபால்காரன் ........