ஏங்குகிறேன்…

ஏங்குகிறேன்…

தாய்மடி தூக்கத்திற்காக

கள்ளமில்லா சிரிப்பிற்காக

கலப்படமில்லா நட்பிற்காக

வேற்றுமையில்லா உலகிற்காக

தன்னலமில்லா அன்பிற்காக

பொய்யுரையா நாவிற்காக

நேர்மையான பார்வைக்காக

கருணை மிகுந்த கண்களுக்காக

முதல் முறை வெற்றிக்காக

முழுமையான காதலுக்காக

மாதம் மும்மாரிக்காக

வழி நடத்தும் தலைவனுக்காக

கேட்டவுடன் கிடைக்கும் உதவிக்காக

தேவை தீர்க்கும் செல்வத்திற்காக

குறை தீர்க்கும் கடவுளுக்காக

நிறைவேறும் கனவுகளுக்காக

நெடுந்தூர பயணத்திற்காக

ஏமாற்றம் தரா உறவுகளுக்காக

உண்மையான பாராட்டிற்காக

ஆனந்தக் கண்ணீருக்காக

அமைதியான உறக்கத்திற்காக

ஏக்கமில்லா வாழ்விற்காக

எழுதியவர் : ஆனந்தி கண்ணம்மா (6-Feb-12, 12:00 pm)
பார்வை : 268

மேலே