ஜாதி மல்லி

செத்துப் போன சின்னச் சாமி
சிரிச்சிக்கிட்டே உயிர விட்டான்....

சந்தோசம் தாங்காமே
அவன அவனே கொன்னுக்கிட்டான்

சாதி வெறி மீட்டிங்குலே
சரக்கடிச்சி சப்பாத்தி தின்னு

சாகடிச்சான் எல்லோரையும்
சந்தோசமாய் சந்தோசமாய்

சாயந்தரம் அவன் குடிச்சது
சாவுமணி அவன் அடிச்சது

காட்டுக்குள்ளே கள்ளச் சாராயம்
கட்டிக் கிட்டான் தூக்குக் கயிறு

கபோதி அனாதையா
சிரிச்சிக்கிட்டே செத்துக் கிடந்தான்

ஜாதி மல்லி தூவிடுங்க - அவன்
ஜாதி என்னென்னு கேட்டுப் புட்டு...!

எழுதியவர் : (6-Feb-12, 11:42 am)
பார்வை : 246

மேலே