தாய்மை வாழும் பூமி

இளமையில்
கனவுகளுடன் கர்ப்பத்தில்
சுமந்தாய்!
நினைவுகளுடன் நெஞ்சத்தில்
தாங்கினாய்!
ஈன்ற நாள்முதல்
உதிரத்தை பாலாக்கி
ஊட்டி உயிர் கொடுத்தாய்!
கண்ணம் சிவக்க
முத்தங்கள் கொடுத்து
உதட்டையே தேய்த்து கொண்டாய் !
வறுமையின் பிடியில்
அழுது கண்ணீர் விடும்போதெல்லாம்
ஆறுதாலாய் கண்ணீரை துடைத்து
மௌனத்தில் நீ அழுது கொண்டாய் !
நான் வளர
நித்திரை இழந்தாய் !
பசியை இழந்தாய் !
உன்னையே உருக்கிகொண்டாய் !
இருந்தும் .....
உன் கனவுகள் நிஜமாகவில்லை...
நித்திரை சுகமும் வாய்க்கவில்லை...
சிந்திய உதிரத்திற்கு கைமாறும்
கிடைக்கவில்லை ..
அன்பு முத்தத்திற்கு
அரவணைப்பும் கிடைக்கவில்லை...
பசிக்கு புசிக்க உணவும் கிடைக்கவில்லை ....
உறங்க உறைவிடமும் கிடைக்கவில்லை..
ஆனால்...
இன்றும் ...
உன் மகனின் இளமைகால சிரிப்பையும்
குறும்புத்தனத்தையும்
முத்தத்திற்கு பெற்ற பதில்
முத்தத்தையும் ...
அசைபோட்டு
அனைத்தையும் துறந்து
அமைதியாய் தூங்கும்
இந்த தியாக உணர்வை
எங்கிருந்து கற்றாய் அன்னையே ....
உனக்கு மகனாய் பிறந்து
உன்னை பாரா மனிதர்களும் பாவிகளே..
ஒவ்வொருவருக்கும் தாய்கள்
வேறாகலாம்...
பழமைகள் மாறலாம்....
மாறாதது ..
தாய்மை ஒன்றுதான்
என்றும்,எங்கேயும், எப்பபொழுதும்...
வாழும் இந்த பூமியில் .........

--மேகநாதன்

[ இக்கவிதை என்னையும், இவ்வுலக மக்கள் அனைவரையும் ஈன்ற தாய் குலத்திற்கு சமர்ப்பனம் ..]

எழுதியவர் : மேகநாதன் (7-Feb-12, 2:05 pm)
பார்வை : 355

மேலே