முரண்பாடு
சிறு பிள்ளையாய் இருந்தேன்
என்னை அணைத்து வளர்த்தாள்
தவழும் பொழுது என்னை
தட்டி கொடுத்து வளர்த்தாள்
நடக்கும் பொழுது என்னை
கண்காணித்து வளர்த்தாள்
இளைஞன் ஆனேன்
என்னை அதட்டி வளர்த்தாள்
இன்று அவளை பார்க்க யாரும் இல்லை
சொல்ல முடியாத தள்ளாத வயதில்........
தன்னை தானே கவனித்துக்கொண்டு.........
மார்தட்டி சொன்னான் மகன்
நான் இவ்வுலகில் வெற்றியாளன் என்று
முரண்பாடு தான் அவன் சொல்லும் வெற்றி சரித்திரம்
இருந்தும் அவன் வெற்றியாளன் தான்
தன் படைப்பாளியை மறந்த வெற்றியாயலன் தான்