தோழி

மலையென துன்பம் வந்தாலும்
சாய்ந்து கொள்ள உன் மடியையே தேடினேன்;
நீ கொடுக்கும் ஆறுதலில்
என் வலியும் மறைந்து போகுமே;
என் சிறிய வெற்றி சந்தோஷத்தையும் உன்னிடத்தில் பகிரும் போது அது வானிலும் பெரியதாய் மாறியதே;
வீழ்வதும் எழுவதும் தான் வாழ்க்கை
உன்னை போல் ஒரு தோழி
விழும் போது கை கொடுக்கவும்
எழும் போது தோள் கொடுக்கவும்
இருந்தால் வாழ்க்கையே அழகானது ஆகுமே!!!!