மணல்வீடு

பாதுகாப்பு தேடி ஓடிய எங்களுக்கு
பதுங்கு குழிகள் தந்தன,
நிரந்தரமில்லா அடைக்கலத்தை...
அடுத்தகணம்,
அவைகளுக்கும் மரணம்...

மரண பயணத்தில் மறந்துபோனோம்
உடைமைகளையும் உறவுகளையும்,
மரணம் மட்டும் இன்னும்
முடியாத தொடர்கதையாக...

அடுத்தவரின் துன்பம் கண்டு
அனுபவிக்கும் இன்பமது
அற்பத்தனம் என்ற தமிழனுக்கு
ஆண்டவனே கொடுத்த பரிசு இதுவோ ???

அரக்கனின் பிடியில்
அப்பாவி மக்கள்
அனுதினமும் தொடர்கிறது
அவர்களின் மரணம்
அந்தக் கொலைகாரனுக்கு மட்டும்
ராஜமரியாதை இங்கே !?

ஆணவத்தால் ஆட்டமிடும் அரசுக்கு
அண்டைநாடு பாதுகாப்பு
எதற்கு ???
இன்னும் இருக்கும் தமிழர்களையும்
இறைச்சியாக்கி உணபதற்கா ???

விடியாத வாழ்க்கை
முடியாத மரணங்கள்
சொந்த மண்ணிலோ அடிமைகள்
வந்த மண்ணிலோ அகதிகள்...

நடவடிக்கை எடுக்கப்படும் என்ற
நம்பிக்கைகூட ஊசலாடுகிறது
எங்களின் உயிர்போல
கடலோரம் கட்டப்பட்ட
மணல்வீடாய்...

எழுதியவர் : Anithbala (12-Feb-12, 12:47 pm)
பார்வை : 247

மேலே