காதலர் தின பரிசு...

இன்று காதலர் தினமாம்....
நித்தமும் என்னை காதலிக்கும்
என் காதலிக்கு பரிசு தர சட்டை
துலாவி பார்த்தேன்...
காலாவதியான பேருந்து சீட்டும்,நகை அடமான
சீட்டும் இருந்தது..
அலமாரியை துழாவினால் கிடைத்தது
பொக்கிஷம்...
கார்ல் மார்க்சும்,லியோ டால்ஸ்டாயும்,
லெனினும் இருந்தனர்..
முதல் வரிசையில் வைரமுத்து சிறிது கொண்டிருந்தார்..
ஆதலினால் காதல் செய்ய சொன்ன சுஜாதா
சந்தோசமாக சிரித்தார்....
அவளவு பேரையும் பாரபட்சமின்றி விற்று பரிசு
வாங்கி சென்றால்...
உனக்கு எது இவளவு காசு என்கிறாள்..???
சொன்னேன்...கண்ணீருடன் செல்லமாய் ஒரு
குட்டு..
கிடைத்துவிட்டது எனக்கு சிறந்த காதலன் விருது ...