காகித பெண்ணே
காகித பெண்ணே
எங்கள் எழுத்துவின்
நடை , உடைகளை
உடுத்திய பின்பு
உன் நிர்வாணம்
மறைக்கப் பட்டு
உனக்கு அழகு
உருவாகிறது !
கழுதை கூட
உன்னை முத்தமிட
நினைக்கையில்
மனிதர்கள் மட்டும்
மனம் மாறி
மதியிழந்து
உன்னையும்
கசக்கி எறிவது
ஏன் ?