தெரியவில்லையடி பெண்ணே..!!
உனக்கே தெரியும்...
நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என..!
எத்தனை நாளாய் காத்திருக்கிறேன் என..!
என்னவெல்லாம் கனவு கண்டிருப்பேன் என..!
உனக்கே தெரியும்...
எத்தனை வலிகள் ஏற்று கொண்டேன் என..!
எவ்வளவு உறக்கம் இழந்திருப்பேன் என..!
எத்தனை சொந்தம் மறந்திருப்பேன் என..!
ஆனால்..,
எனக்கு மட்டும் தெரியவில்லையடி...
" நீ என்னை காதலிக்கிறாயா...?" - என......!!!!!