அந்தி மாலை பொழுதில்...
அந்தி மாலை பொழுதில்...
ஜில் என்று வீசும் காற்று-
அவள் கூந்தலை முத்தமிட்டு கொண்டிருந்தது;
லேசான மழைத் தூறலோ-
என்னவளின் பொன் மேனியில் விழுந்து-
முத்துகளாக மாற முயற்ச்சி செய்து கொண்டிருந்தன!
இதை பார்த்த ஆதவனோ-
ஆத்திரத்தில் மேற்கு பகுதியில் தலை மறைவானாண்!
வண்ண நிறத்தால் ஆன வானவில்-
அவள்-
என்னோடு நடப்பதை கண்டு
மனம் நொந்து-
ஒடிந்து விட்டது..!
அவள் கரம் பிடித்து நடந்த தருணங்கள்-
முட்களால் குத்தபடுவதை போன்ற
"இரணம்" கொடுத்து கொண்டிருந்தது;
மீண்டும்-
அவள் இல்லாததை நினைக்கும் போதெல்லாம்...!!!