புரியவில்லை
பேசினால் கடுப்பாகவும்
பேசாவிட்டால் தவிப்பாகவும்
பக்கத்தில் இருந்தால் வெறுப்பாகவும்
தூரத்தில் இருந்தால் நினைப்பாகவும்
விரும்பும்போது வேண்டாமென்றும்
வேண்டாதப்போது விருப்பமென்றும்
புரியாத இந்த உணர்வு போராட்டம்
எதற்கென்று புரியவில்லை