என்னவள் பிரிகையில் . . . என்னவள் பிரிகையில் . . . என்னவள் பிரிகையில் . . .
என்னவள் பிரிகையில் . . .
எரிமலை குழம்பிற்குள்
எந்தன் இதயம் . . .
என்னோடு கலந்து விட்டவள் ;
கண் திறந்ததும் கலைந்து விட்டவள் ;
நெஞ்சோடு நின்றிருந்தால் -
நிஜமாயிருக்கும் எந்தன் உலகம்
நெஞ்சோடு காதல் கொண்டிருந்தாள்
இருந்தும்
பிஞ்சோடு அதனை பிடுங்கி சென்றாள்
பஞ்சோடு பறந்து சென்றதோ
அவளின் பாசம் ??