ஜன்னல்

காலைத்தென்றல்
குயிலின் சத்தம்
மாலைச் சூரியனென
பூத்துக்குலுங்கிய
என் வீட்டு ஜன்னல்
உன்னைப் பார்த்ததுமுதல்
உன் நிழற்படம் ஆனதடி.

இப்போதும் அழகு
கொப்பளித்துக் கொண்டிருக்கிறது
ஜன்னலின் வெளியே
ஆனால் ரசிக்க மனமில்லை!

அழகாய் தெரிந்த ஜன்னல்
சிறையாய் தெரிகிறது
உன்னைப் பார்த்தது முதல்!

எழுதியவர் : சேகர் (20-Feb-12, 8:00 pm)
சேர்த்தது : dhanasekaran10
Tanglish : jannal
பார்வை : 246

மேலே