கணவன்-மனைவி (சிவன்-சக்தி)

அறிந்தோ, அறியாதோ
விஷத்தை அருந்திவிட்டேன்
உமிழ்ந்தால் உலகமழிந்துவிடும்
உட்கொண்டால் உயிர்துறந்துவிடும்
உமிழாது உயிர்களைக் காத்தேன்
உட்கொள்ளாது உமையவள் காத்தாள்
இக்கவிதை,
சிவ-சக்திக்கு என்று நினைக்காதீர்;
ஒவ்வொரு குடும்பத்திலுள்ள
தனித்தனி கணவன்-மனைவி தம்பதியினருக்கும் பொருந்தும்
(உலகம் என்பது வீடு; விஷம் என்பது பிரச்சனை)
சக்தி இல்லையேல் சிவம் இல்லை