"நான் தான் மனசாட்சி பேசுறேன்"



பெற்றோர் என்ன..? மற்றோர் என்ன..?
கற்றோர் என்ன..? உற்றோர் என்ன..?

உலகெங்கும் எனது ஆட்சி தான்..,
மனித இனத்தை ஆளும் "மனசாட்சி" நான்...

உண்ண சோறு இல்லையென்றாலும்,
திண்ணை சோறு இல்லமென்றாலும்,
நித்தம் என்னை நினைத்ததால்
சத்தமில்லாமல் இறக்கிறான்..,

வங்கியில் இருப்பு, வீட்டில் கருப்பு
என காசு பணத்தை சேர்க்கிறான்,
மறைத்து வைத்து சேர்த்த பணத்தை
மருத்துவ செலவு பார்க்கிறான்..,

திடீரென்று தீமை வந்தால்
என்னை திட்டி தீர்க்கிறான்,
பெற்ற சொந்தம் கை விட்ட பின்பும்
என்னை நினைத்து பார்க்கிறான்..,

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட
நீளம் 'வாழ்க்கை' என்ற சிறப்பு தானோ,
சிறப்பு நீங்கா சிரிப்பு வந்தால்
என்னை நீங்கள் மறப்பதேனோ..,

கொடுமைகளை இழைக்கும் போதும்,
கோடிகளை இழக்கும் போதும்,
என் நினைவு உங்களுக்கு வரவில்லை,
அதனால் தான் இன்பம் உங்கள் வரவில் இல்லை..,

மனசாட்சிக்கு பயமுள்ளவனுக்கு காரில்
போவது வெறும் கனவானது,
மனசாட்சி என்பது மறுத்தும் மறந்தும்
போனது அக்காரில் போகும் கணவானுக்கு..!

என்னை என்றும் மறக்காமல் இருப்பது
தானே உனக்கு என்றும் நல்லது..,
என்னை மறக்கவும் நினைக்காத நினைக்கவும்
மறக்காத உன்னத உணர்வு நட்பில் தானே உள்ளது..!

மெய் மறந்தும் மறைத்தும் பொய் கூறும் வேளையிலே
நான் செத்து கிடப்பேன் ஒரு மூலையிலே..!

கோபம், தாபம், பொறமை, சண்டை சச்சரவு,
அங்கு துன்பம் தானே நல்வரவு..!

நியாயம் தனை மறுத்து,
உண்மை தனை மறந்து,
ஆடம்பர பண காட்சிதனில் மூழ்கி,
மன சாட்சிதனை முழுங்கி,

பொதுநலம் மறந்து தன்னலம் நிறைந்து
சுயநலமாய் வாழ்கிறாய் எந்நாளும்,
உண்மையாய் நீ வாழ்ந்து வந்தால்
இந்த உலகமும் வரும் உன்பின்னாலும்..!

உன் மனசாட்சியை நீ வென்றால் உன் மரண
படுக்கையிலும் இன்பமதை உணர்வாய்...,
உன் மனசாட்சியை நீ கொன்றால் உன்
இன்பத்திலும் மரணவதை உணர்வாய்..!

தரம்கெட்டு தரணியில் வாழும் மனிதா?
ஒருநாளும் ஒழுக்கம் என்பது உனதல்ல,
நீ ஒழுக்கமானவன் என்றால் இது உனக்கல்ல..!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (20-Feb-12, 7:24 pm)
பார்வை : 555

மேலே