சொல்லாத வார்த்தை சொர்க்கத்திலே
பேருந்திற்காக காத்திருந்த தருணம் ,
என்னருகே நின்றிருந்தாள் ஊன்றுகோளோடு
அறுபது வயதுமிக்க மூதாட்டி..
மூக்குகண்ணாடியை உயர்த்தியபடி பார்வையை
பயணிக்க தொடங்கினாள் சாலையின் மறுபுறம்
அவளோடு நானும் பயணிக்க
தென்படுகிறான் கவனமின்றி சாலையை கடக்கும் சிறுவன் ,
காதுகேட்காதோ..? என்றேன் எரிச்சலோடு நான்
வார்த்தை முடிவதற்குள் ....
பேருந்தில் புறப்பட்டு வந்த எமனை
விரட்டிவிட்டாள் பாட்டி..
தன் மனிதாபிமானத்தால்.......!
பாராட்டுதலை பதிவு செய்ய புறப்பட்டேன்
மழலை பேசவோ கேளவோ இயலாத சிறுவனாய்
மெல்லிய புன்னகையை உதிர்கிறான் என்முன்னே
வருத்தத்தோடு விடைபெற்றேன் நான் ...
அவன் சொல்லாத சொல்ல வழியற்ற
நன்றிகள் சொர்க்கத்திலே.............!