ஒரு கவிதையும் மூன்று வாழ்க்கையும்

அந்த சாலையோர சிறுவனைப்
பார்க்கும் போதெல்லாம்........
எப்போதும் வந்து விடும்
பாரதியின் பாடலொன்று.....
"நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ".....
குடிகார தந்தையை உருவகம் செய்தால்
முதல் முகமும் இறுதி முகமுமாய்...
அவர் முகம் மட்டுமே இருக்கும் என் மனதில்...
அந்த சிறுவனின் மனது சிந்தித்திருக்குமோ?
"சொல்லடி சிவசக்தி ! எனை சுடர்மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்"
அவன் அழுது புரண்ட போதும் ...
உண்ண மறுத்த போதும் ...
தந்தையின் கல்நெஞ்சம் கரையவில்லை....

என் நண்பர்களும் நானும்
உதவ சென்ற போதும்
ஒத்துக் கொள்ளவே இல்லை
அவன் தந்தை.....பள்ளிக்கு அனுப்ப....
"வல்லமை தாராயோ ! இந்த நானிலம்
பயனுற வாழ்வதற்கே"
நாங்கள் சந்தித்த மறுநாள்.....
சாலையோரம் வெற்றிடமாய் இருந்தது....
அச்சிறுவனின் வாழ்க்கை போலவே...

எழுதியவர் : (21-Feb-12, 8:13 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 253

மேலே