ஈரம்

ஒற்றை அடிப்பாதை
மழை பெய்த ஈரம்
மூடியான போதிலும்
முளைத்து வீசியது
மண்வாச மலர்....

நடந்த போது
நெஞ்சம் தொட்டுப் பார்த்தேன்...
அன்புமழை பொய்த்து
அழகு இதயம் காய்ந்து
மனித நேய ஈரமின்றி
மனசு நாத்தம் அடித்தது

எழுதியவர் : (23-Feb-12, 10:18 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : eeram
பார்வை : 188

மேலே