ஞாபகம் இருக்கிறதா?

ஊர்க்கோடி அய்யனார்...
ஓடித் திரிந்த வயல்வெளி...
காக்காய் கடி கடித்து மகிழ்ந்துண்ட
நண்பன் தோட்டத்து
அணில் கடித்த கொய்யா காய்...
மனம் ஈர்க்கும் சிலுவை கோபுரம்...
சாரை சாரையாய்
சந்தனக் கூடு காண...
யானையின் பின்னே
நடந்து போன நாட்கள்...
இவையெல்லாம் உனக்கு
ஞாபகமிருக்குமெனில்,
அன்பே...
என்னையும் உனக்கு
ஞாபகம் இருக்கும்!!

எழுதியவர் : (4-Sep-10, 7:06 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 378

மேலே