ஆசை தான்
ஆசை தான்
மீண்டும் நான்
படித்த கல்லூரி சாலைக்கு செல்ல !!
ஆசை தான்
மீண்டும் என்
கல்லூரி மண்ணின் வாசம் நுகர்ந்திட !!
ஆசை தான்
மீண்டும் அந்த
மேஜையை தடவிப் பார்த்திட !!
ஆசை தான்
மீண்டும் ஒரு நாள்
இரவு ஒன்றாக பரிட்சைக்கு படித்திட !!
ஆசை தான்
மீண்டும் அந்த
கூட்டான்சோறு சுவைத்திட !!
ஆசை தான்
மீண்டும் என்
தோழன் தோல் சாய்ந்திட !!
ஆசை தான்
மீண்டும் என்
தோழி கை கோர்த்து நடந்திட !!
ஆசை தான்
மீண்டும்
நட்பின் மழையில் நனைந்திட !!
ஆசை தான்
மீண்டும்
ஒரு நாள் மாணவன் ஆகிவிட !!
ஆசை தான் ஆசை தான்
மீண்டும்
இவை எல்லாம் ஒரு முறை
நடந்திட !!
ஆசை தான் ஆசை தான் !!!