தாய்ப்பாசம்

மழைதரும் மண்வாசம்
மனம்தரும் மாம்பூவாசம்
அள்ளிவச்ச மல்லிவாசம்
அளந்துவச்ச கொளுந்துவாசம்
பொத்திவச்ச பூவாசம்
பூத்துசிரிச்ச பிள்ளைபாசம்
மொட்டுதெரிந்த முல்லைவாசம்
உரசிவச்ச மஞ்சல்வாசம்
நெத்திநனைஞ்ச திருநீறுவாசம்
பூத்துப்போன நெல்வாசம்
புழுத்துப்போன புளுங்கல்வாசம்

உயிர்ஆக்கி உணர்வாகி
எனைதழுவும்-உன்
தாய்ப்பாசம்

அன்புடன்
நாகராஜன் சமுத்திரம்
ரெட்டைகுளம்

எழுதியவர் : நாகராஜன் சமுத்திரம் (26-Feb-12, 12:15 am)
பார்வை : 318

மேலே