எனது வழி

எனது வழியில் கண்களுக்கு வேலையில்லை
காதுகளுக்கோ சம்மந்தமேயில்லை
நுகர்தல் தொடுதலுக்கு இடமில்லை
சுவைப்பதற்கு சூனியம் தான் உண்டு.
புலன்கள் நுழையா அப்பரவெளியில்
நான் பதிக்கும் சுவடுகளின் சப்தங்கள் கேட்டால்
சொல்
நீயும் அங்கே வருவதற்கு அருகதை உள்ளவன்.
கால விலங்குகள் அற்ற பரவெளியில்
காத்திருக்கிறேன் பலகாலமாய்.
ஒன்றுமின்றி எனது வழியில் வா
உனக்கு அனைத்தையும் காட்டுகிறேன்
உன்னையும் அதில் காட்டுகிறேன்
பொறுமையுடன் வேகமாய் வா,
காலமற்ற வெளியில் காத்திருக்கிறேன்
பலகாலமாய்.
மு.பாலசுப்ரமணி