மரமண்டைக்கு புரியல..

காக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
காத்திருக்கும் இவர்களுக்கு சம்பந்தம் இருக்கிறது

காலை வேளையில்
கால்வலி அறியா காக்கைகள்
ஒரு காலின்(1/4) வழிதேடி நிற்கின்றன.

காதலில் மட்டுமல்ல -இந்த
காக்கைகளிடமும் கேட்டுபாருங்கள்
காத்திருப்பதின் கரு விளங்கும்.

விலங்கும் கொஞ்சம் சிரிக்கும்
இந்த விளக்க வாதிகளின்
கெஞ்சல்களையும்,
இவர்களுக்கு விளங்கியபின் வரும்
கொஞ்சல்களையும் கண்டால்.

இங்கு ஒருவன் பலூன்காரன்
ஊதிவிற்ற பணத்தில்
ஊற்றிப்போக வந்திருக்கிறான்

அங்கு அவன் மகன் -அரிசியில்லா
நீரின் கொதிநிலையில்
அறிவியல் கற்கிறான்

இவர்கள் துறவியா? -இல்லை
ஈன பிறவியா? -இது
ஒருவகை நியாபக மறதியா?

வேற்றுகிரகத்தை பிடிக்க முயன்று
வெட்டி அவந்து போகுதே
கவலைகளை மறக்க நினைத்து
ஆணின் கற்பு இறந்து போகுதே

இவர்களுக்கு
சாலைகள் பஞ்சுமெத்தை
சாக்கடைகள் பாலாறு
வாந்தி பிறந்தால் வாழ்வுபிறக்கிறது
வார்த்தைகளில் என்னென்னமோ பிறக்கிறது

நீங்க மருந்தென மகிழும்
மரணத்தின் விருந்தாளி
எங்களிடம் இருந்து மறைத்துவிடுகிறான்

இறந்த சேதியும்
இறந்துபோச்சே
மறந்த உலகம்
காலங்கடந்து சொல்லுச்சே

எங்க கண்ண
எங்களாலயே நம்ப முடியலயே
எங்க கண்ணே -உன்ன
கட்டிபுடிச்சு அழக்கூட முடியலேயே

ரெண்டு நாலு நாத்தம்
வந்து தடுக்கல.
வீங்கிப்போன தோலு
உடைந்சுதுன்னா
உனக்கு வலிக்காதுன்னு
மரமண்டைக்கு புரியல..

எழுதியவர் : எழுத தெரியாதவன் (26-Feb-12, 1:29 am)
பார்வை : 380

சிறந்த கவிதைகள்

மேலே