நலம் அறிய ஆவல்..!

சிறு பிள்ளைத்தனமாய் திருந்தும் குறுநகை இதழில் மலர்ந்தும் குறும்புகள் நீங்கா எறும்புக் கூட்டமான சில்மிஷம் செய்யும் சில்வண்டுகளாய் பள்ளி பருவ தோழர்களின் நலம் அறிய ஆவல்..! முகவரி மறந்தும் முகம் மறவாத திருக்குறள் மறந்தும் இவன் குரல் மறவா கல்லூரி நண்பர்களின் நலம் அறிய ஆவல்..! நண்பனின் நண்பனாய் இருந்தும் பிள்ளைகள் போல காத்த ஆசிரியர்களின் நலம் அறிய ஆவல்..! சொல்லாக் காதலை போற்றும் ஒரு தலைக் காதலனாக்கி முதற் காதல் அனுபவம் தந்த அவளின் நலம் அறிய ஆவல்.! ரயில் பயணத்தில் அறிமுகமாகி புது அனுபவம் தந்த நண்பரின் நலம் அறிய ஆவல்..! பேருந்து பயணத்தில் சந்திக்க நேர்ந்த அன்பரின் நலம் அறிய ஆவல்.! கவிதை குடும்பத்தில் இணைந்த எழுத்து இணையதள நண்பர்களின் நலம் நலம் அறிய ஆவல்..!

எழுதியவர் : ரா.வினோத் (26-Feb-12, 2:03 pm)
பார்வை : 513

மேலே