Freshers day முதல் Farewel day வரை..
சேமித்து வைத்த செல்போன் குறுஞ்செய்திகளும் முகநூல் அரட்டைகளிளும் மிஸ்டுகால் அழைப்புகளிளும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும்.. ஹலோடோன் முதல் ரிங்டோன்கள் வரை நட்பின் பாடல்கள் ஒலித்திருக்கும்..ஆட்டோகிராஃப்பும் போட்டோகிராஃப்பும் நியாபகச் சின்னங்களாய் இருக்கும்.. நாள்காட்டியும் நாட்குறிப்பும் நினைவுகளை பதம் பார்க்கும்.. டா போடும் தோழியையும் தோளில் கை போடும் தோழனையும் எண்ணி மனம் மமதையில் மிதந்திருக்கும்.ஆண் பெண் தோழமையை எண்ணி உலகம் வியந்திருக்கும்... புன்னகித்து பூத்த நட்பு முகம் புண் பட்டாற் போல் வாடியிருக்கும்..கை குலுக்கி தொடங்கிய நட்பு கட்டியணைத்து கலங்கியிருக்கும்.... தேனீரில் தொடங்கிய நட்பு கண்ணீரில் முடிந்திருக்கும்...