எது மனித உரிமை?...

கொள்ளையர்களை சுட்டுக்கொன்றது சரியா தவறா?
சரி என்கிறது பொதுமக்கள் பலரின் குரல்கள்.
தவறு என்கிறது மனித உரிமை கழகக் குரல்கள்.
மனித உரிமை என்றால் என்ன?
மனித உரிமை எப்படி பாதுகாக்கப்படுகிறது?
மனித உரிமை மீறல் என்றால் என்ன?
மனித உரிமை மீறல்களை எப்படி தடுப்பது?
மனித உரிமை மீறல்களுக்கு என்ன தண்டனை?
இப்படி பல கேள்விகள் பொதுமக்கள் மனதில்...
சரியான பதில் சொல்வது யார்?
ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்...
இந்த பூமியில் பிறந்த வொவ்வொருவருக்கும் இங்கு வாழும் உரிமை உண்டு.
மொழி, மதம், இனம் போன்றவைகளை காரணம் காட்டி, யாரையும் புறக்கணித்துவிட முடியாது.
வேலைக்கு வெளிநாடு செல்பவர்கள் கூட அந்த நாட்டின் குடியுரிமை பெறமுடியும்.
இவ்வாறான உரிமைகள் அந்தந்த நாட்டின் அரசமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது.
தன் வாழ்வாதார உரிமைகளை தவறாக பயன்படுத்துபவர்களும் , மற்றவரின் உரிமையில் குறிக்கிட்டு, அவர்களை துன்பப் படுத்துவதும், மனித உரிமை மீறல்கள்.
இப்படி மீறுபவர்களை அந்தந்த அரசே விசாரித்து தண்டனை வழங்குகிறது.
வொவ்வொரு நாடும் தனது சட்டதிட்டங்களை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி கண்காணித்து வந்தால், மனித உரிமை மீறல்களை குறைக்க முடியும்.
இப்போது நடந்திருக்கும் துப்பாக்கிசூடு சம்பவத்தில்
மனத உரிமை மீறப்பட்டிருக்கிறது,
யாரால்? கொள்ளையர்களால்...
பலரின் வாழ்வாதாரமாக விளங்கும் வங்கிகளை கொள்ளையாடித்தது,
போலியான அடையாள அட்டை தயாரித்து விருப்பப்படி திரிந்தது,
கைது செய்யவந்த காவலர்களை தாக்கி தப்பிக்க முயன்றது,
பொதுமக்களை சுடத் துணிந்தது,
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு காவல்துறை, அவர்களோடு கட்டிப்பிடி வைத்தியம் பார்க்கவேண்டும் என்கிறதா மனித உரிமை கழகம்?
இந்த சில மாதங்களில் எத்தனை கண்காணிப்பு, எத்தனை தூக்கமில்லா இரவுகள், எவ்வளவு கெடுபிடிகள், எவ்வளவு காவலர்கள்...
சென்னை நகரில் இரவில் பயணிக்கும் அனைவருக்கும் இது தெரியும்.
கொள்ளையர்கள் சுடப்பட்ட செய்தி அறிந்து அப்பாடா என்கிறது மக்களின் மனது.
இப்படி சுட்டுப் போட்டால்தான் பயம் வரும், கொலை, கொள்ளையில் ஈடுபடும் பாதகர்கள் யோசிப்பார்கள்.
உயிரோடு பிடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்?
2, 3 வருடங்கள் உள்ளிருந்துவிட்டு வந்து, இன்னும் பலரையும் சேர்த்துக்கொண்டு, மீண்டும் கொலை, கொள்ளை பாதகங்களை பெரிதாக செய்வார்கள்...
மேலும் பலரையும் வாழவிடாமல் கெடுப்பார்கள்.
மக்களின் உயிரை பொருட்படுத்தாது கொலை, கொள்ளையில் ஈடுபடும் சுயனால வாதிகளுக்கு இது ஒரு பாடம்.
துணிந்து வீரசெயல் புரிந்த காவலர்களை பாராட்ட வேண்டாம், பழிபோடாதீர்கள்...
காவல் துறையினர்களுக்கு மட்டும் குடும்பம், குழந்தைகள் இல்லையா என்ன?
காவலர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்; நன்றிகள்..!!

எழுதியவர் : ரத்னா (26-Feb-12, 10:33 pm)
சேர்த்தது : RATHNA
பார்வை : 1349

மேலே