மயங்கிய மனமே

மனமே தயக்கமேன்?
உதடுகளை
ஊமையாக்கி
மனதை
இரணமாக்கியது போதும்!


பெண்ணில் தோன்றி
மண்ணில் மறையும்
பிறவியிது!

பெண்ணில் தோன்றி
பெண்ணிலே மறைய
துணிந்தாயே!

சாதிக்க பிறந்தாய்!
சாதியால்
சாக்கடை நோக்கி
பயணிக்கிறாய்...


கருவறையில்
கவனமாய் சுமந்த
தாய்க்கு
கல்லறையில் சென்று
பரிசளிக்க நினைத்தாயே...

பேதையால்
காய்ந்த சருகாய்
போதையில் மூழ்கினாய்!
பார்(bar) - இல் நுழைந்து
‘பாரை’யே மறந்தாய்!

சாதனைகளுக்கு நடுவில்
சாக்கடைகள் தடுக்கும்
தயங்காதே...

சோதனைகளை
சாதனைகளாக்கி
வேதனைகளை
விரட்டியடி!
உலகம் உன் வசமே!!!

எழுதியவர் : விமல் இனியன் (27-Feb-12, 4:45 pm)
பார்வை : 330

மேலே