தலைவிக்கு பிறந்த நாள்

கிழக்கு
வெளுக்கும் முன்..............

தவணைக் கடிகாரம்
தக் தக் தக்
தகப்பனின்
லெக் லெக் லெக்
நாளை காலை
உலைக்கு அலை பாயும்
துணைவியின்
கனத்த லப்டப் லப்டப்
தான் மட்டும்
விழித்து குளித்து
வெளியேறினான் .......

வாசலை வசமாக்கிய
மூத்தவனின் விசா

வாசனை மலராய் மண
வயதில் தன் மகள் வைதேவி

பள்ளி விடுமுறை
செல்ல பிள்ளைக்கு மட்டும்
பணம் கட்டாததால்

மனைவியின்
நெஞ்சில்
தஞ்மான தங்க தாலி
தாழிட்டுக்கொண்டது
செட்டுக்கடையினில்

கரை வேட்டி
கரகாட்டம்
ஆட்டம் , ஆல்கஹால்
பாட்டம்,கொண்டாட்டம்

இவையல்லாம் என்ன

தலைவிக்கு பிறந்த நாளாம்
தலைவலிக்கு தைலம் இரவல்
வாங்கினாள் தம் தாயார்

எழுதியவர் : தப்ரேஜ் (28-Feb-12, 5:32 pm)
பார்வை : 180

மேலே