நீர்வீழ்ச்சி

மேகக் காதலர்கள்
மலைச்சிகரக் காதலிகளை
கிள்ளிச் செல்ல,
நாணுகின்ற சிகரங்கள்
இடைக்கச்சைகளை
நழுவ விடுகின்றன
நீரோடைகளாய்...
வேகமாய்க் கடந்து போகும்
மேகங்களுடன்,
நீராய் முன்னே விழப்போவது
முதலில் யாரென்று
போட்டியிடுகின்றன,
மூலைமுடுக்கிலிருந்தெல்லாம்
பாய்ந்தோடிவரும் நீரோடைகள்...
வயிற்றில் சுமந்த
பிள்ளைகளை
கீழே இறக்கி விட்டுப்
பிள்ளைகள் ஓடி விளையாடுவதை
நின்று ரசிக்கிறாள்
தாயானவள் இந்த நீர்வீ..........[விஜய் கரன்]