ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்!
உன்னை
நல்ல நடிகன் என்பதா
நல்ல மனிதன் என்பதா...

உன்னை
ஒரு நடிகனாக சிலருக்குத் தெரியும்
நல்ல மனிதனாக பலருக்குப் பிடிக்கும்!

நீ சேர்த்தது
பல கோடிகள்!
தெருகோடியில் இருக்கும்
சில ஆயிரம் உள்ளங்களையும் சேர்த்து!

உன் பிம்பம்
திரையில் வந்தால்,
அழகு கூடும்
அந்தத் திரைக்கு!

உன் படம்
திரைக்கு வரும் நாளன்று
ஊரே கூடும்
ஒரு திருவிழாவிற்கு!

நடிப்புக்கு
ஆறிலிருந்து அறுபது வரை...

துடிப்புக்கு
தளபதி!

சிரிப்புக்கு
தில்லு முல்லு!

அமைதிக்கு
ஸ்ரீ ராகவேந்திரா!

ஸ்டைலுக்கு
பாட்சா!

என அனைத்து பரிமாணங்களும்
உனக்குண்டு தலைவா!

அன்புள்ள ரஜினிகாந்த்,
எங்களுக்கு ஓராசை.
பேராசை!

அரசியலுக்கு வர வேண்டாம் நீ!
ஆன்மிகமும் வேண்டாம் உனக்கு!
சிறியதொரு ஓய்வுக்குப் பிறகு,
இன்னும் ஒரு ஐம்பது
திரைப்படங்கள் நடிப்பாயா நீ?
அது போதும் எங்களுக்கு!

திரையில் தோன்றும்போது
விசிலடிக்க,
தலைவா என்று காட்டுக் கத்தல்
கத்த,
எங்களுக்கு இல்லை,
இன்னுமொரு
சூப்பர் ஸ்டார் இங்கு!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (29-Feb-12, 5:23 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 209

மேலே