இப்பிறவி வேண்டாம் .........

" பத்து மாதங்கள் சுமந்தாய் என்னை
இரவு பகல் என்று தூங்காமல் தூக்கம்
கேட்டு அவதிப்பட்டாய் .....
எனக்கு எதாவது ஆகிவிடுமோ என்று எண்ணி
நீ சாப்பிடும் முறையை மாற்றி கொண்டாய் ...
சில சமயம் சாப்பிடாமலும் இருந்தாய் ....
நான் பல முறை உன்னை உதைத்திருக்கிறேன்
அதையும் தாங்கி கொண்டாய் ....
பக்குவமாய் என்னை பார்த்துக்கொண்டாய் அதுவும்
நான் யார் என்று தெரியாமலே....
நானும் கருவறையை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் உன் முகத்தைதான் பார்க்க வேண்டும் என்று அளவில்லா ஆசைகளுடன் வந்தேன் ...
ஆனால் .....!!
நான் கண்விழித்து பார்த்தபோது தான் தெரிந்தது
நான் இருக்குமிடம் "குப்பைத்தொட்டி" என்று
அப்பொழுது எனக்கு தோன்றியது
நான் பிறந்து இருக்கவே கூடாது.....
பிறக்கும் போதே நான் இறந்திருக்க வேண்டும் என்று" .........
சக்தி