ரோபோவின் கவலை

மரத்தடியில் கை ரேகை
ஜோசியம் பார்த்தது - சார்ஜ்
மங்கிப் போன ரோபோ

மனிதரோடு பழகாதே என்றேன்
மரமண்டைக்கு புறியலியா என்று
மடாரென கேட்டது ஜோசியக்கார ரோபோ

எப்படிக் கண்டுபிடித்தாய் ?

லஞ்சம் வாங்கி வாங்கி உன்
கைரேகை இப்போது கருப்பாகி விட்டது
கட்ட மண்ணாய் போய்விட்டாய்
கவலைப் பட்டு பயனில்லை ரோபோவே நீ
மனிதனாக மாறி விட்டாய்

எழுதியவர் : (29-Feb-12, 12:53 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 187

மேலே