காதல் அரசியல்

இறைவனிடம் வேட்புமனு தாக்கல் செய்தேன்
சுயேச்சை வேட்பாளாரான நான்
என்னவளின் இதயத்தை தேர்வு
செய்தேன் போட்டியிடும் வெற்றி தொகுதியாக
அவளை எனக்கு அடையாளம் காண
செய்த விழிகளே சின்னமானது
வாக்குறுதிகளாக என்னையே
அவளுக்கு தர துணிந்தேன்
கள்ள ஓட்டிற்காக கடவுளையே
நாடி உள்ளேன்
அவளின் தீர்பே இறுதியானது
அந்த நாட்களை எதிர்பார்த்து
வழி மீது விழிவைத்து காத்திருக்கிறேன்
நல்லதே நாடாகும் என்று

எழுதியவர் : puthumaivirumbi (29-Feb-12, 10:23 pm)
சேர்த்தது : puthumaivirumbi
Tanglish : kaadhal arasiyal
பார்வை : 195

மேலே