மகளே உனக்காக.! ..பொள்ளாச்சி அபி

பூ மகளே எந்தன் பொன் மகளே..!-இன்று
காணும் சந்தோஷம் என்றும் வாழ்கவே..!

பெற்றவர்க்கு பெருமை சேர்க்க நீயும் வாழ்கவே..உனை
சேர்பவர்க்கு உறுதுணையாய் என்றும் வாழ்கவே.!
கற்றவழி சிறந்து உந்தன் கடமை வாழ்கவே..-வரும்
காலமெல்லாம் உந்தன் பெயர் நிலைத்து வாழ்கவே..!
வாழ்க..வாழ்கவே..

பலன்கருதா மழைபோல நீயும் வாழ்கவே.-காற்று
போல அனைவரையும் இணைத்து வாழ்கவே..!
துயரிருளைப் போக்கிவிடும் ஒளியாய் நீயும்..
அந்த இயற்கையம்சம் அனைத்தையுமே விளங்கி வாழ்கவே
வாழ்க..வாழ்கவே..!

பொருளான செல்வங்கள் நிலைத்துவிடாது..
அழகான வடிவென்றும் வாழ்ந்து விடாது..
அறிவொன்றே புவிமீது சத்தியமாகும்..-இதை
அறிந்தேதான் மகளே நீ வாழ்க..வாழ்கவே..!

- என் மகள் "ஷாலினி"க்கான பிறந்தநாள் பரிசு -

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (29-Feb-12, 8:44 pm)
பார்வை : 308

மேலே