காதல் சிலபேருகுதான் கிடைகிறது 555

அழகே.....

காதல் வரும் நேரம்
மனதிற்குள்
மகரந்தமின்றிப் பூ பூக்கும் ...

கடந்து சென்ற பின்னே
மலர் சிதைந்து
மௌன பூகம்பம் ...

வடுக்கள் வேறாகலாம்...

வலிகள் ஒன்று தான் ...

என்ன செய்ய...

சில பேருக்கு தான்
காதல் கிடைக்கின்றது ...

காதலில் சேர்வதும்
சிலர்தான்...

பலபேருக்கு காதலின்
நினைவுகள் மட்டும்தான்...

பல பேருக்குக் கிடைப்பதென்னவோ
வெறும் கவிதைகள் மட்டுமே...

எனக்கு கிடைத்தது போலவே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Mar-12, 10:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 320

மேலே