வேதாவின் ஆத்திசூடி - ஏ, கார வரிகள்

‘அ’ கர வரி அடிகளில்
‘ஏ’ காரம்.

ஏற்பது இகழ்ச்சி.


ஒருவரிடத்தில் சென்று பிச்சை கேட்பது,
இரந்துண்டு வாழ்வது இகழ்தலுக்குரியது.
இது ஒளவையாரின் வரி.



இனி எனது வரிகள்.



1. ஏகாந்தம் எப்போதும் நல்லதல்ல.
2. ஏவல் மொழி கேட்டுப் பிறரைப் பகைக்காதே.
3. ஏய்த்தல், ஏமாற்றுதல் விலக்கு.
4. ஏமாளியாய் வாழாதே.
5. ஏண்டாப்புக் கொள்ளாதே.
6. ஏட்டுப் படிப்புடன் அனுபவ அறிவும் இணை.
7. ஏன் என்ற கேள்வி எப்போதும் கேள்.
8. ஏற்றமும் தாழ்வும் சமமெனக் கருதி வாழ்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-7-2010.

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (3-Mar-12, 2:58 am)
பார்வை : 244

புதிய படைப்புகள்

மேலே