தேன் தமிழ்

கும்மியடிங்கடி ! கும்மியடி !
தங்கத் தமிழ்நாடு செழிக்க கும்மியடி !
கும்மியடிங்கடி ! கும்மியடி !
செந்தமிழ் நாடு சிறக்க கும்மியடி !
சந்தனம் பன்னீர் ஜவ்வாது போலே
சங்கத்தமிழ் மூன்றும் தந்திடும் கும்மியடி !

சிந்துசமவெளி நாள் முதலாய்
சிறப்புறும் மொழி நம் தமிழ்மொழியே !
திராவிட மொழிகள் பல ஈன்ற
தாய்மொழி நமது தமிழ்மொழியே !
அறிவியல் புதுமைகள் ஆயிரம் வந்தாலும்
அனைத்திற்கும் ஏற்றது நம் மொழியே !

அவ்வையின் வாக்கை அமுதம் தானென்று
அள்ளி பருகிட வேண்டுமடி !
வள்ளுவன் வாக்கை வாழ்க்கையில் ஏற்றி
வாழ்ந்திட நாளும் வேண்டுமடி !
தொல்காப்பியர் தந்த இலக்கணத்தை
எழுதிப் படித்திட வேண்டுமடி !

சேயே தாயைக் கொல்வது போலே
நாமே நம்மொழி அழித்திடலாமோ !
பாலில் விஷம்தான் கலப்பது போலே
பேச்சிலும் பிறமொழி வேண்டாமடி !

உலகில் உள்ள மொழிகள் அனைத்திலும்
உயர்ந்தது நம் தமிழ் செம்மொழியே ...!

எழுதியவர் : முஹமது யூசுப் (2-Mar-12, 7:30 pm)
பார்வை : 520

புதிய படைப்புகள்

மேலே