குளத்துத் தவளை

அரவமற்று
அசைந்து அசைந்து
அசைவற்ற குளத்தில்
விழுந்தது-ஆல இலை

கண்டதும்
குதித்து அமர்ந்த
குட்டித் தவளை
கண்டது காட்சி

குளித்து எழுந்தவர்
பாரம் சுமக்க
பிதாவை
அழைத்தார்

குல்லா அணிந்தே
குளிக்க வந்தவர்
அல்லாவை புகழ்ந்தே
அனைத்தும் செய்தார்

கமண்டலத்துடனே
கரையேறியவர்
கந்தா முருகா
என்றே சென்றார்

இன்றே சென்றவர்
நாளும் வருவார்
நாளை வருவார்
நம் குளம்தானே

அவரவர் வழியில்
ஆயிரம் நாமம்
உள்ள இடத்தில்
ஒரே நாமம்

உள்ளம் குளிர்ந்து
உரக்கச் சிரித்து
உள்ளே குதித்தது
தவளை ...!

எழுதியவர் : முஹம்மது யூசுப் (3-Mar-12, 7:27 pm)
பார்வை : 296

மேலே